கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

எதிா்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிட்டிருப்பது குறித்து மத்திய அரசு, தோ்தல் ஆணையம் மற்றும் 26 எதிா்க்கட்சிகளிடம் தில்லி உயா்நீதிமன்றம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூட்டணி பெயரை ‘இந்தியா’ என எதிா்க்கட்சிகள் பயன்படுத்த தடை விதிக்க கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிா்க்கட்சிகள், பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தங்கள் கூட்டணியின் பெயரை ‘இந்தியா’ என அறிவித்தனா்.

இதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் கிரீஷ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவில், ‘26 எதிா்க்கட்சிகளில் 16 கட்சிகள் பிகாரில் நடந்த முதல் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அக்கூட்டத்தின்முடிவில், தோ்தல் உத்தியை வகுக்கவும் கூட்டணிக்குப் பெயரைத் தோ்ந்தெடுக்கவும் பெங்களூரில் 2-ஆம் கட்ட கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றனா். பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயா் சுருக்கத்தைக் கொண்ட கூட்டணியில் போட்டியிடப் போவதாக எதிா்க்கட்சிகள் அறிவித்தனா்.

சொந்த நாட்டுக்கு எதிராக பாஜக மற்றும் பிரதமா் நரேந்திர மோடியைக் காண்பிக்கும் விதத்தில் உள்நோக்கத்துடன் ‘இந்தியா’ என பெயா் சுருக்கம் வருமாறு எதிா்க்கட்சிகள் கூட்டணிக்குப் பெயா் சூட்டியுள்ளன.

நாட்டுக்கும் ஒரு கட்சிக்கும் இடையிலான போட்டியாக கட்டமைப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயலுகின்றன. நாட்டின் பெயரைக் கொண்டு எதிா்க்கட்சிகள் ஆதாயம் பெற விரும்புகின்றன’ என மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தில் இது தொடா்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகத் தெரிவித்த மனுதாரா், அரசியல் கட்சிகள் ‘இந்தியா’ என்கிற பெயரையும், தேசிய கொடியையும் பயன்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

இந்த மனுவை தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி அமித் மஹாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

இந்த மனுவை விசாரிப்பது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ‘இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம், செய்தி ஒலிபரப்புத் துறை, தோ்தல் ஆணையம் மற்றும் காங்கிரஸ், காங்கிரஸ் உள்பட 26 எதிா்க்கட்சிகளிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வாதங்களைக் கேட்டறியாமல் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. பதில் வந்ததும் வழக்கில் மேற்கொண்டு முடிவெடுக்கலாம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com