உ.பி.யில் மர்மநபர்களால் வழக்குரைஞர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வழக்குரைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வழக்குரைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள நெக்ரஹி கிராமத்தில் டீ கடை ஒன்றில் நேற்றிரவு வழக்குரைஞர் ஆசாத் என்பவர் தனது சகோதரருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் வழக்குரைஞரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. மேலும் அவரது சகோதரரும் காயமடைந்தார்.

சம்பவத்திற்குப் பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உள்ளூர்வாசிகள் இருவரையும் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆசாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என ஏராளமானோர் மாவட்ட மருத்துவமனையில் திரண்டனர்.

சுல்தான்பூர் காவல் கண்காணிப்பாளர் சோமன் வர்மா மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விஷயம் விரைவில் தெரியவரும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.

மர்ம நபர்களால் வழக்குரைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com