குருகிராமில் 144 தடை உத்தரவு வாபஸ்!

குருகிராமில் 144 தடை உத்தரவு வாபஸ்!

ஹரியாணாவின் குருகிராம் மாவட்டத்தில் 144 தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
Published on

ஹரியாணாவின் குருகிராம் மாவட்டத்தில் 144 தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவம், இரு பிரிவினருக்கு இடையே மதக் கலவரமாக மாறியது. இதைத் தொடா்ந்து, அருகிலுள்ள குருகிராம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கலவரம் பரவியது. இதில் 2 ஊா்க்காவல் படையினா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, நூ மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவைக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும், நூ மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்படுள்ள கட்டங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அருகிலுள்ள குருகிராம் மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதையடுத்து 144 தடை உத்தரவை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com