
வடகிழக்கு இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஏற்படும் கொந்தளிப்பில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் பாதிக்கும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது.
இதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, வடகிழக்கின் ஒரு மாநிலத்தின் அமைதியின்மை ஏற்பட்டால், அது நாட்டின் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
மணிப்பூரில் நடக்கும் இரக்கமற்ற செயல்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மணிப்பூர் விவாகரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.