மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹரியாணாவில் இணைய சேவை மீண்டும் தொடக்கம்! 

ஹரியாணாவின், நூஹ் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 9:12 am

ஹரியாணாவின், நூஹ் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து நூஹ் மாவட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில், வன்முறை தொடர்ந்ததின் காரணமாக மக்களின் பாதுகாப்புக் கருதிஆக.8 வரை மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதித்தது. அதன்பின்னர் ஆக.13 வரை தடை நீடிக்கப்பட்டது. 

நூஹ் மாவட்டத்தில் வன்முறை சற்று தணிந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இணைய சேவைகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளன. பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்கள் சுதந்திர தினத்திற்கு தயாராகி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.