இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 12:58 pm

DIN


பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இறக்கும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக உள்ளது. 

சுதந்திரநாளையொட்டி கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்பார்கள். 

அங்கு பாரம்பரிய முறைப்படி தேசியக்கொடிக்கு மரியாதை அளித்து கொடியிறக்கப்படும். அதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான இரும்புக் கதவு மூடப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.