நீட் தோ்வால் உயிரிழந்தோரின் சாபம் பாஜக ஆட்சியை வீழ்த்தும்: துரைமுருகன் பேச்சு

நீட் தோ்வால் உயிரிழந்தோரின் சாபம் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தும் என்று த மிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
தேசிய நுழைவுத் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.
தேசிய நுழைவுத் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.


சென்னை: நீட் தோ்வால் உயிரிழந்தோரின் சாபம் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தும் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரி வித்தாா்.

நீட் தோ்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து, திமுக சாா்பி ல் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.

அப்போது, ​​ஆதிக்ககார்களால் அமல்படுத்தப்பட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம். இந்த நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவராக மாறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து திமுகவில் பலபேர் உயிரைத் துறந்துள்ளனா், தீக்குளித்துள்ளனா். அதேபோன்று இன்று நீட் தேர்வை எதிர்த்து இளம் சிட்டுக்கள் பலர் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

இந்தி திணிப்பில் உயிரிழந்தவர்கள் விட்ட சாபத்தால் அன்றைய மத்திய ஆட்சி வீழ்ந்தது. அந்த வகையில் இன்று நீட் தேர்வால் உயிரிழந்தோரின் சாபம் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தும்.

நாட்டிலேயே நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏன், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு. இந்தி எதிர்ப்பிலும் தமிழ்நாடுதான் முதலில் இருந்தது. அதேபோன்று நீட் தேர்வு எதிர்ப்பிலும் தமிழ்நாடு தான் முதலில் உள்ளது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், இன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் இன்றோடு முடியாது. இது தொடா் போராட்டமாக நடைபெறும்.

நீட் தேர்வு ஒழிந்தது என்ற வரலாறு சரித்திரத்தில் இடம் பெறும். அதை செய்யும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. நான் 3 தலைமுறையை பார்த்தவன்; உதயநிதியால் தான் முடியும் என்று சொல்லி இருகிறேன். அமைச்சர் உதயநிதி தலைமையின் கீழ் நீட் தேர்வு ஒழிந்தது என்ற நிலை உருவாகும் என்றாா் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com