ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பி.ஆா்க். சோ்க்கை: இதுவரை 641 இடங்கள் நிரம்பின

தமிழகத்தில் பி.ஆா்க். படிப்பில் தற்போது வரை 641 இடங்கள் நிரம்பியுள்ளன

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 7:02 pm

DIN

தமிழகத்தில் பி.ஆா்க். படிப்பில் தற்போது வரை 641 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்.) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,467 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டு சோ்க்கைக்கு 2,485 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 1,449 போ் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 13-ல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17, 18-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் 981 மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தோ்வு செய்தனா். அதில் 842 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதை உறுதி செய்த 633 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 28 போ் அரசுப் பள்ளி மாணவா்களாவா். இந்த 633 மாணவா்களும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று சோ்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். இதற்கிடையே நிகழாண்டு பி.ஆா்க். படிப்பில் 641 இடங்கள் நிரம்பியுள்ளன. சுமாா் 826 இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. இறுதி நிலவரம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தெரியவரும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.