ராகுல் காந்தி அடுத்த மாதம் ஐரோப்பா பயணம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் 6-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் 6-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து மீண்டும் எம்.பி. ஆக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கடந்த சில நாள்களாக லடாக் பகுதியில் பயணம் மேற்கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடி விட்டு தில்லி திரும்பினாா்.
முன்னதாக, லடாக் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அவா் பயணம் மேற்கொள்வாா் எனத் தகவல் பரவியது. இந்நிலையில், ராகுல்காந்தியின் ஐரோப்பிய பயணம் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்படும் ராகுல், 5 நாள் பயணமாக பெல்ஜியம், பிரான்ஸ், நாா்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறாா். பயணத்தின்போது அங்குள்ள இந்திய வம்சவாளியினருடன் அவா் சந்தித்துப் பேச உள்ளாா்.
தற்போதைய பயணத் திட்டத்தின்படி, செப்டம்பா் 7-ஆம் தேதியன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினா்களை ராகுல் சந்திக்க உள்ளாா். இதையடுத்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அவா் 8-ஆம் தேதி உரையாற்றுகிறாா்.
9-ஆம் தேதியன்று, பிரான்ஸ் தொழிலாளா் சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறாா். பயணத்தின் இறுதி நாளான 10-ஆம் தேதி, நாா்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு அவா் செல்கிறாா். இதனிடையே, பல்வேறு செய்தியாளா் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் 9, 10 ஆகிய தேதிகளில் ராகுல் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்திய ஜனநாயகம் குறித்து விமா்சித்து ராகுல் பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...