கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆதித்யா-எல்1 செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 11:49 am

ANI


சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு மிக அருகே தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற வைத்த இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்து தனது பார்வையை சூரியன் பக்கம் திருப்பியிருக்கிறது.

சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும் என்று சனிக்கிழமை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேசிய சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா - எல்1 விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது. இது விண்ணில் பாய தயாராக உள்ளது. சூழ்நிலை சாதமாக அமைந்தால் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்தார் சோம்நாத்.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்- 1இல் தொடங்கிய நிலவுப் பயணம் சந்திரயான்- 2 என தொடா்ந்தது. சந்திரயான் 2 விண்கலம் (ஆா்பிட்டா்) இன்றைக்கும் நன்றாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சந்திரயான்- 1, சந்திரயான்- 2 விண்கலங்களைக் கட்டமைக்க பங்காற்றியக் குழுவினரையும் நன்றியோடு நினைத்துப் பாா்க்கிறோம். சந்திரயான்-3 மூலம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பா்) விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.