ரூ.3,289 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ்!

நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்ரூ.3,289 கோடி மதிப்புள்ள புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
ரூ.3,289 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ்!

பெங்களூரு: நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 2023 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையான மாதங்களில் ரூ.3,289 கோடி மதிப்புள்ள புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத ஆர்டர்களைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறைந்த அளவிலான இலகு எடை கொண்ட ரேடார்கள், சோனார்ஸ், ஐ.எஃப்.எஃப் அமைப்புகள், சாட்காம் அமைப்புகள், ஈ.ஓ. / ஐ.ஆர். பேலோட்கள், டி.ஆர்.எம் / டி.டி.ஆர்.எம்கள், ஜாமர்கள், என்கிரிப்டர்கள், டேட்டா லிங்க் அமைப்புகள், ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், டைரக்ட் எனர்ஜி சிஸ்டம்களுக்கான ரேடார்கள், மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோக்கள் மற்றும் பல்வேறு வகையான ரேடியோக்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஏஎம்சி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான ஆர்டர்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சிஎம்எஸ், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், ஈடபிள்யூ சிஸ்டம்ஸ் மற்றும் கடற்படை ஆதரவு கப்பல்களுக்கான பிற சென்சார்களை வழங்குவதற்காக இந்துஸ்தான் ஷிப்யார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ரூ.1,075 கோடி மதிப்புள்ள ஆர்டரும் இதில் அடங்கும் என்று பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பெல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்டர்கள் ஏற்கனவே பெறப்பட்ட ரூ.8,091 கோடி ஆர்டர்களுடன் கூடுதலாகும். இதன் மூலம் 2023-24 நிதியாண்டில் இதுவரை பெல் நிறுவனம் மொத்தம் ரூ.11,380 கோடி ஆர்டர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com