ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாகிஸ்தானில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தானின் சிந்துவில் டெங்கு பாதிப்பு 896 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!
Updated On :29 ஆகஸ்ட் 2023, 12:40 pm

DIN

பாகிஸ்தானின் சிந்துவில் டெங்கு பாதிப்பு 896 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் சிந்து மாகாணத்தில் மொத்தம் 731 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. கராச்சியின் கிழக்கு மாவட்டத்தில் 291, மத்திய பகுதியில் 126, கோரங்கியில் 79, தெற்கில் 136, மேற்கில் 20, மாலிர் மற்றும் கீமாரியில் 396 ஆகவும் பதிவாகியுள்ளன. 

அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய சுகாதார நிறுவனம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

முட்டையிடும் வாழ்விடங்களுக்கு கொசுக்கள் வராமல் தடுப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு புழுக்கள் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

மழைக்காலத்தில் கொசுக்கடியால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்க, முழுக்கால் கொண்ட ஆடைகளை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.