இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
லடாக் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு மக்களிடையே பேசும்போது, 'கார்கில் அருகே சீனப் படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். இது கார்கில் பகுதி மக்களுக்கும் தெரியும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்துப் பேசிய சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ரௌத், 'இந்திய பகுதிகளான அருணாச்சல பிரதேச மாநிலம் மற்றும் அக்சய் சின் பகுதியை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் நாட்டின் வரைபடத்தை சீனா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கும் உரிமை கோருகிறது.
லடாக்கில் உள்ள பாங்காங் பள்ளத்தாக்கில் சீனா நுழைந்ததாக ராகுல் காந்தி கூறியது உண்மைதான். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது துல்லியத் தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்த வேண்டும்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வாழ்த்தினார். அதன்பின், சீனா தன் நாட்டின் வரைபடத்தை வெளியிடுகிறது' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!
தேர்தல்கால கோரிக்கைகள்!

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

