தேர்தல் வருவதற்கு இதுதான் அறிகுறி: ப.சிதம்பரம் விமரிசனம்

தேர்தல் வருகிறது என்பதற்கு இதுதான் அறிகுறி என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசை விமரிசித்துள்ளார். 
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தேர்தல் வருகிறது என்பதற்கு இதுதான் அறிகுறி என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசை விமரிசித்துள்ளார். 

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக எல்பிஜி விலையை ரூ.200 குறைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.200 குறைந்து ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பதிவில், தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!

ரூ. 1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!

வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

நடப்பாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com