வெளிநாடு திரும்புவோரின் அத்தியாவசியப் பட்டியலில் இடம்பெற்ற அரிசி

சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்துவிட்டு திரும்பும் தமிழர்கள், கொண்டு செல்ல வேண்டிய அத்தியாவசியப் பொருள்களில் அரிசி முக்கிய இடம்பிடித்துவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


திருச்சி: சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்துவிட்டு திரும்பும் தமிழர்கள், கொண்டு செல்ல வேண்டிய அத்தியாவசியப் பொருள்களில் அரிசி முக்கிய இடம்பிடித்துவிட்டது.

பொதுவாக, மிளகாய் பொடி, ஊறுகாய், இட்லி பொடி, பருப்புப் பொடி, முருக்கு, தட்டை, அதிரசம் போன்றவற்றைத்தான் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்வார்கள். 

ஆனால், கடந்த ஜூலை மாதம், இந்தியாவிலிருந்து பாசுமதி அரிசியைத் தவிர்த்து மற்ற அரிசிகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர் உள்ளிட்ட சில ஆசிய சந்தைகளில் அரிசியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அண்மையில் பச்சரிசி ஏற்றுமதிக்கும் 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இந்தியா விதித்த அரிசி ஏற்றுமதி தடையால், சிங்கப்பூரில், அரிசி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 5 கிலோ அரிசி ரூ.500க்கு விற்கப்பட்டது என்றால், தற்போது ரூ.800 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழகத்துக்கு வந்து செல்லும் மக்கள், தங்களுடைய பல உடைமைகளை குறைத்துக் கொண்டு, 20 கிலோ வரை அரிசியை மட்டுமே சுமந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், நம் ஊரில் விளையும் அரிசி போல ருசி வராது என்கிறார்கள் கவலையோடு.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அரிசி விலை ஏற்றத்துக்கு இந்தியாவில் அரிசி ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது ஒன்றுமட்டும் காரணமல்ல என்றும் கூறப்படுகிறது.

அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கும் காலம் வந்துவிட்டது. இனி என்னென்ன வரப்போகிறதோ.. தடை விழப் போகிறதோ என்று மக்கள் இப்போதே கலங்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com