திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி நியமனம்! 

தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 7:36 am

தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநில அலகுகளில் நிறுவன மறுசீரமைப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஷீலா தீட்சித் அரசில் முன்னாள் அமைச்சரான லவ்லியை தேசிய தலைநகரில் கட்சியின் கமிட்டி தலைவராக நியமித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017இல் பாஜகவில் சேர்ந்த லவ்லி, சில மாதங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு தலைவராக அனில் சௌத்ரிக்குப் பதிலாக அரவிந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

Story image

பதவி விலகும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அனில் சௌத்ரியின் பங்களிப்பை அக்கட்சி பாராட்டியதாக ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.