மோடி அரசு ரயில்வே துறையை அழித்து வருகிறது: கார்கே விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ரயில்வே துறையை அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மோடி அரசு ரயில்வே துறையை அழித்து வருகிறது: கார்கே விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ரயில்வே துறையை அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ரயில்வே பட்ஜெட்டை ஒழித்ததன் மூலம் மோடி அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகிவிட்டது.

பாலசோர் விபத்து போன்ற மிகப்பெரிய விபத்துக்கு பிறகும், கவாச் பாதுகாப்பு கருவி ஒரு கிலோ மீட்டருக்கு கூட இணைக்கப்படவில்லை.

இந்த ஆண்டு மட்டும் 10 சதவீதத்திற்கும் அதிகமான ரயில்கள் தாமதமாக வந்துள்ளன.

ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிப்பது கூட மிகவும் விலையுயர்ந்ததாகி விட்டது. படுக்கை வசதி கொண்ட சாதாரண வகுப்பு கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

கைதட்டல்களைப் பெறுவதற்காக வெள்ளை வண்ணம் பூசப்பட்ட ரயில்களைத் தொடக்கி வைப்பதில் மட்டுமே பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு, வசதி, நிவாரணம் ஆகியவற்றில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒரு துளி கூட கவனம் செலுத்தவில்லை.” இவ்வாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com