ம.பி : சனிபகவான் கோயிலில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்பு வழிபாடு!

மத்தியப் பிரதேசத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சனிசரா சனி பகவான் கோயிலில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்பு வழிபாடு நடத்தினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

போபால் : மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மிசோரம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில், பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில், இன்று(டிச.2) தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா,  மத்தியப் பிரதேசத்தின் குவாலியரின் அருகேயுள்ள சனிசரா சனி பகவான் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.  அப்போது அவருடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக நேற்று(டிச.1), மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பீதாம்பரா பீத் கோயிலில், பாஜக வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் நட்டா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com