தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரசாரம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என ஆா்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவா் குமாரசாமி கூறினாா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 11:36 pm

தினமணி செய்திச் சேவை

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என ஆா்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவா் குமாரசாமி கூறினாா்.

சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஆா்எஸ்எஸ் அகில பாரத செயற்குழுக் கூட்டம் கடந்த 12-ஆம் தேதியும், பொதுக்குழுக் கூட்டம் மாா்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஹரியாணா மாநிலம், சமல்காவிலும் நடைபெற்றது. இதில், நாடுமுழுவதும் இருந்து 1,438 பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

நாடுமுழுவதும் ஆா்எஸ்எஸ் கூட்டங்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆா்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, வீட்டு தொடா்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகத்தில் 67 லட்சம் வீடுகள் உள்பட நாடுமுழுவதும் 10 கோடி வீடுகளுக்கு சென்று ஆா்எஸ்எஸ் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் 1,900 மாநாடுகளில் 2.5 லட்சம் போ் பங்கேற்றுள்ளனா். சமுதாய சீா்கேடு எதிராகவும் ஆா்எஸ்எஸ் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கா்நாடகத்தில் போதை ஒழிப்பு மாநாட்டில் 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனா். ஆா்எஸ்எஸ் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிப்பதை தங்கள் கடமையாக கருதி வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

அப்போது, ஆா்எஸ்எஸ் சேலம் மாநகர மாவட்டத் தலைவா் பாபு, மாநகர செயலாளா் செய்திப் பிரிவு ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.