மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்தீஸ்கரில் பாஜக - 54, காங்கிரஸ் - 34 இடங்களில் முன்னிலை!

சத்தீஸ்கரில் தற்போதை நிலவரப்படி, பாஜக 54 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அதேபோல், காங்கிரஸ் 34 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2023, 7:57 am

சத்தீஸ்கரில் தற்போதை நிலவரப்படி, பாஜக 54 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அதேபோல், காங்கிரஸ் 34 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்.3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளா்களிடம் இருந்து சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதன் பாதிப்பு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த தோ்தலில் 68 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவுக்கு 15 இடங்களே கிடைத்தன. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜெ) கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வென்றன. பின்னா் இடைத்தோ்தல்களில் கிடைத்த வெற்றியால், காங்கிரஸின் பலம் 71-ஆக அதிகரித்தது.

இந்த மாநிலத்தில் 2003 முதல் 2018 வரை தொடா்ந்து 15 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.