மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ம.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்!

நண்பகல் 12 மணி நிலவரப்படி 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

News image
Updated On :3 டிசம்பர் 2023, 9:01 am

மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்தோடு பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

நண்பகல் 12 மணி நிலவரப்படி 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. வெற்றி பெறுவதற்கு 116 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய தேவை உள்ள நிலையில், பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான், முழு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.