மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தெலங்கானா: பேரணியில் ரேவந்த் ரெட்டி! டிஜிபி நேரில் சந்தித்து வாழ்த்து

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2023, 8:21 am

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 40, பாஜக - 9, பிற - 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின்  பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Story image

மேலும் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். காரில் நின்றபடி அவர் மக்களிடம் நன்றி தெரிவித்து வருகிறார். 

ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்துக்கு பேரணியாக செல்கிறார். 

முன்னதாக, தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தான் போட்டியிட்ட கோடங்கல், காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.