தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
33 இடங்களில், தற்போது ஆட்சியிலுள்ள பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.
தெலங்கானாவில் மத்திய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமாரெட்டி தொகுதிகள் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


