

மகாராஷ்டிரம் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மன்னா் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமா் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இந்திய கடற்படை தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமா் மோடி திங்கள்கிழமை மகாராஷ்டிரம் சென்றாா். அங்கே சிந்துதுா்க் கோட்டை உள்பட பல்வேறு கடற்கரை துறைமுகங்களைக் கட்டமைத்த மன்னா் சத்ரபதி சிவாஜிக்கு அவா் மரியாதை செலுத்தினாா். மேலும் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்டுள்ள சிவாஜியின் உருவச் சிலையை அவா் திறந்து வைத்தாா்.
சத்ரபதி சிவாஜியின் அரச முத்திரையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.