கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா

சிறுபான்மையினருக்கான பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறு?: கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநில முதல்வர், சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 
Published on

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமூகத்தினரையும் பாதுகாப்பேன் என உறுதியளித்தார். இதனை இஸ்லாமியர்களை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறியதாய் சில ஊடகங்கள் திரித்துக் கூறியதாகக் குற்றம் சாட்டினார். 

மேலும், சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை ரூ. 4000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக உயர்த்துவதாக அவர் தெரிவித்ததற்கு எழுந்த விமர்சனங்களுக்கு, 'அதில் என்ன தவறுள்ளது' என்ற கேள்வியைப் பதிலாக அளித்துள்ளார். 

எனது உரையைத் திரித்து ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என வறுத்தம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com