ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘இந்தியா’ ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார்: எம்.பி.யின் கருத்தால் சலசலப்பு!

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் செயல்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் ராம் நாத் தாக்குர் தெரிவித்துள்ளார்.

News image
நிதிஷ் குமார் (கோப்புப்படம்)
Updated On :6 டிசம்பர் 2023, 8:16 am

DIN

‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நகா்வு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே-யின் தில்லி இல்லத்தில் புதன்கிழமை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஞாயிறன்று(டிச.3) வெளியான சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது.

பாஜகவின் வெற்றி, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிா்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதே பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

இந்தநிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் இன்று(டிச.6) மாலை, ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டனர்.  

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது.  

இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் செயல்பட வேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் நாத் தாக்குர் தெரிவித்துள்ள கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று(டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்த ராம் நாத் தாக்குர் கூறியதாவது, ”பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தனக்கென உருவாக்கியிருக்கும் பிம்பம்,  அவர் ’இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட பொருத்தமானவராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, ”இதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, முன்வைக்கப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இதுபோன்ற கோரிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டால், அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், ”அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து செல்லும் தலைவராக, நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராக, சிவசேனை(உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே  உள்ளார்” என்றும் சஞ்சய் ரௌத் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.