மும்பை: மாகராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பயாஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துனை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மறைந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 67-வது நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அம்பேத்கர் மறைந்த நாள், மகாபரிநிர்வாண் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மும்பை சிவாஜி நகரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடம் சைத்யபூமியில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் அம்பேத்கரின் நினைவிடத்திற்கு வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் அம்பேதக்ர் என சரத் பவார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தாக்கரே கட்சி, அம்பேத்கர் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் குவிந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையே அவரது பணி மற்றும் கருத்தியலுக்கான சாட்சி எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாக்டர் அம்பேத்கர் மறைந்த அந்த நாளில்......
டிச. 6 - பொது விடுமுறையாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் நினைவு தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் மும்பையில் உள்ள அவரது நினைவிடத்தில் குவிந்து வருவதால் மக்களுக்குத் தேவையான தற்காலிக கூடாரங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசிதிகளைச் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


