47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தான்: முதல்வர் யார்? 5 எம்எல்ஏக்களின் ரகசிய கூட்டம்!

ராஜஸ்தானில் முதல்வர் யார் என்பதை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.

News image
வசுந்தரா ராஜே | கோப்பு
Updated On :7 டிசம்பர் 2023, 11:25 am

DIN

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்கிற சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது கோட்டா பகுதி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் ரகசிய சந்திப்பு. 

பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

அதற்கிடையில் லலித் மீனா என்கிற சட்டப் பேரவை உறுப்பினரைச் சக உறுப்பினர் ஒருவர் நகரத்துக்கு வெளியே உள்ள விடுதிக்கு வரவழைத்துள்ளார். ஏற்கெனவே 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள் அங்கிருந்த நிலையில், லலித் மீனா வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

லலித் மீனாவின் தந்தை கட்சியிடம் புகார் தெரிவிக்கவே, அடுத்த நாள் லலித் மீனா மீண்டும் திரும்பியுள்ளார்.

இது குறித்து அம்மாநிலத்தின் பாஜக தலைவர், “யாரையும் தடுத்து நிறுத்தப்படவில்லை. எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ளனர். முதல்வர் யார் என்பது கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். கட்சியின் கவனிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகே அந்தக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பட்டியலில் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பெயர் அடிபடுவதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.