யுபிஐ செயலி பயன்படுத்துபவரா? ஆர்பிஐ-யின் முக்கிய அறிவிப்பு!

யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கான வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கான வரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் வெள்ளிக்கிழமை (டிச.8) நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றமுமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்றும் ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மற்றொரு முக்கிய அறிவிப்பாக, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக செய்யப்படும் சில குறிப்பிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதாவது மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் தனிப்பட்ட நபர் ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என்றும் இது யுபிஐ பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com