கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தெலங்கானா பேரவையின் தற்காலிக தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்பு!

தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றுக் கொண்டார்

News image

தெலங்கானா பேரவையின் தற்காலிக தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றார். 

Updated On :9 டிசம்பர் 2023, 7:22 am

DIN

தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றுக் கொண்டார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா பேரவைத் தேர்தலில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இதன்மூலம் தெலங்கானாவில் பிஆா்எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தைக் கைப்பற்றின. 

Story image

ஹைதராபாதின் எல்.பி. மைதானத்தில் டிச. 7 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேவந்த் ரெட்டி, துணை முதல்வராக விக்ரமா்கா, அமைச்சா்களாக உத்தம் குமாா் ரெட்டி, கோமடிரெட்டி வெங்கட ரெட்டி, சி.தாமோதா் ராஜநரசிம்மா, டி.ஸ்ரீதா் பாபு, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகா், கொண்டா சுரேகா, டி.அனுசுயா, தும்மலா நாகேஸ்வர ராவ், ஜுபள்ளி கிருஷ்ண ராவ் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்கு ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா். 

Story image

இதையடுத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்கும் பொருட்டு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி தேர்வு செய்யப்பட்டார். 

இன்று(சனிக்கிழமை) ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அவர் தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டியும் உடனிருந்தார். 

தற்காலிக அவைத் தலைவர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்ற பின்னர், எம்எல்ஏக்கள் இணைந்து புதிய சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.