பஞ்சாப் எல்லையில் ட்ரோன் கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில் ஃபெரோஸ்பூரில் உள்ள மபோக் கிராமத்திற்கு அருகே ஆளில்லா விமானம் ஒன்றைப் பாதுகாப்புப் படையினரால்  கைப்பற்றப்பட்டது. 

இதையடுத்து, இன்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட பொருள்களை மீட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருவதோடு, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com