மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் என்ஐஏ சோதனை: 15 பேர் கைது! 

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தொடர்புடையவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் வசித்து வருவதாகத் தேசிய புலனாய்வு முகமைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனை தாணே 2 இடங்களிலும், தாணே கிராமத்தில் 31 இடத்திலும், தாணே நகரில் 9 இடத்திலும், பயந்தரில் ஒரு இடத்திலும் நடைபெற்றது. 

இந்த நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com