சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வர் இவர்தான்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 
விஷ்ணு தியோ சாய்
விஷ்ணு தியோ சாய்

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

அதில் பாஜக 54 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 35 இடங்களில் வெற்றியடைந்த காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. 

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வரை ஆளும்கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இவர் 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக பணியாற்றியுள்ளார். மோடியின் மத்திய அமைச்சரவையில் சுரங்கத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com