பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!

பாஜக எப்போதுமே அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!

பாஜக எப்போதுமே அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது விநியோக திட்ட விழாவில் பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமரின் இலவச ரேஷன் திட்டத்தை மறந்துவிடும் என்று கூறினார்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் மாதத்திற்கு பிறகும் ஐந்தாண்டுகளுக்கு தொடரும். இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை விமர்சித்து மம்தா பானர்ஜி பேசியதாவது: “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இலவச ரேஷன் அரிசி திட்டத்தை நீட்டிப்பது குறித்து அறிவித்துள்ளார். 

பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் அவரின் அறிவிப்பு செயல்படப்போவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தாலும்கூட இத்திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை. ஏனென்றால் ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் இந்த திட்டத்தையே மறந்துவிடுவார்கள். 

ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று? 

தேர்தலுக்கு முன்பாக மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து தேயிலைத் தோட்டங்களை மறுசீரமைத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதி தற்போது என்னவாயிற்று? பாஜக எப்போதும் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது." என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com