விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மனைவி, குழந்தைகளைக் கொன்று கணவர் தற்கொலை!

உத்தர பிரதேசத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, குழந்தைகளைக் கொன்று கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

News image

கோப்புப்படம்.

Updated On :11 டிசம்பர் 2023, 5:39 am


உத்தர பிரதேச மாநிலத்தில் தேவ்தே கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் ராம் எனும் நபர் குடும்ப பிரச்னைக் காரணமாக மனைவி மகன்களைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

30 வயதான மனைவி, 7 வயதான மகன் மற்றும் 4 மாதங்களான குழந்தையின் உடல் வீட்டிற்கு முன் இருந்த தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்த ராம் அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

ராமின் சட்டைப் பையிலிருந்து கிடைத்த தற்கொலைக் கடிதத்தில் குடும்பத்தைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ராம் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான பிரச்சனை சம்பந்தமான வழக்கு நடந்துகொண்டிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.