குஜராத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட காரில் சென்ற ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதான் மாவட்டத்தின் பாங்க்லி பகுதியில் தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென காரின் குறுக்கே ஒரு காட்டுப்பன்றி சாடியதால் அவசரமாக வண்டியை நிறுத்த முயன்றுள்ளார். இந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த ஒரு குட்டைக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
குட்டைக்குள் கார் மூழ்கத் தொடங்கிய நிலையில், காரின் உள்ளே மாட்டிக் கொண்ட மொத்த குடும்பமும், கார் கதவைத் திறந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில், காருக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காலை 6.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், காரில் இருந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

