சபரிமலையில் கட்டுப்பாடற்ற நிலைமை இல்லை: கேரள முதல்வர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்தாண்டு தினசரி 1.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். 

சபரிமலை தேசிய யாத்திரை தலமாக இருப்பதால், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். 

நவகேரள சதாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 

அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கூட்ட மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிராகரித்த முதல்வர், ஒவ்வொரு முறையும் சன்னிதானத்தில் அவசரத்தின் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் மேல்நோக்கி மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். 

கட்டுப்பாடற்ற அதிக அவசரம் காரணமாகவே நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, நாங்கள் மிகுந்த கவனத்துடன் விஷயங்களைக் கையாண்டு வருகிறோம். 

கடந்த மண்டல சீசனின் ஆரம்ப நாள்களில் நாளொன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றனர். ஆனால் நடப்பு சீசனின் 4 நாள்களிலேயே 88 ஆயிரத்தைத் தாண்டி பக்தர்கள் வருகின்றனர். 

சென்னையில் வெள்ளம், தெலங்கானாவில் பேரவைத் தேர்தல் காரணமாக பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொது விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சபரிமலைக் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதிக நெரிசலைச் சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பாட் முன்பதிவை மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com