மைசூர் விமான நிலையத்திற்கு இஸ்லாமிய அரசர் பெயர், கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க!

மைசூர் விமான நிலையத்திற்கு இஸ்லாமிய அரசர் பெயரை வைக்க காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ள நிலையில், பாஜக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான்.

மைசூர் விமான நிலையத்திற்கு இஸ்லாமிய அரசர் திப்பு சுல்தான் பெயரை வைக்க காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பிரசாத் அபய்யா பரிந்துரை செய்ததை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

கர்நாடக சட்டசபையில், விமான நிலையங்களின் பெயர்களை  மாற்றுதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது  தொடர்பான ஆலோசனையின் போது அபய்யா தனது கருத்தைத் தெரிவித்தார். மைசூர்  விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் விமான நிலையம் எனப் பெயர் சூட்ட அவர் பரிந்துரைத்தார். 

இதனால் பா.ஜ.க உறுப்பினர்கள் கோபப்பட்டு, எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. திப்பு சுல்தான் பெயரை வைப்பதற்கு பாஜக எதிர்ப்பினைத் தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. 

எனினும், கடந்த வியாழக்கிழமை நான்கு விமான நிலையங்களுக்கு முக்கிய பிரமுகர்கள் பெயரை வைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

அந்த தீர்மானத்தில் ஹுபால்லி விமான நிலையத்திற்கு கிரண்டிவீர சங்கோல்லி ராயன்னாவின் பெயரும், பெலகாவி விமான நிலையத்திற்கு கிட்டூர் ராணி சென்னம்மா பெயரும், சிவமோகா விமான நிலையத்திற்கு ராஷ்டிரகவி டாக்டர் கே வி புட்டப்பா பெயரும், விஜயபுரா விமான நிலையத்திற்கு ஸ்ரீ ஜெகத்யோதி பசவேஷ்வராவின் பெயரும் வைக்க மத்திய அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

2016-ல் கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா திப்பு சுல்தானின் பிறந்த நாளான நவம்பர் 10-ஐ 'திப்பு ஜெயந்தி'யாக கொண்டாட முடிவு செய்தார். 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த முடிவு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com