மும்பையில் 202 கத்திகளுடன் பிடிப்பட்ட நபர் கைது!
தெற்கு மும்பையில் பல்வேறு அளவுகளில் 202 கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.


மும்பை: தெற்கு மும்பையில் 200-க்கும் மேற்பட்ட கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில், மும்பை மற்றும் அமராவதி காவல்துறையின் கூட்டுக் குழு நேற்று முசாபிர் கானா பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். கைது கைது நபரிடம் இருந்து பல்வேறு வகையான 202 கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்பது கத்திகள் 21 அங்குல நீளம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்ட பாந்த்ராவைச் சேர்ந்த சையத் கமர் உசேன் மீது ஆயுதச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையின் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...