எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபில்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் குறித்து..

News image
வான்வழித் தாக்குதல்
Updated On :2 மார்ச் 2026, 6:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கிய நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துகிறது. லெபான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், குவைத் தொடர்ந்து தாக்குதலை எதிர்கொண்டதால், அங்குள்ள அமெரிக்கர்கள் வீட்டிற்குள் இருக்குமாறும், மேலும், அவர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீதான போர் பதற்றத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனிடையே கர்நாடகத்தில் அயதுல்லா கமேனி வருகை தந்த கிராமத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.

இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Israeli airstrikes on Lebanon after Hezbollah attacked Israel have killed at least 31 people, Lebanon's Health Ministry said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.