புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு புகைப்படம்! பாஜக மீது குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையிலிருந்து ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை பாஜக நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

News image

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு

Updated On :19 டிசம்பர் 2023, 11:22 am

DIN

மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையிலிருந்து முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக-வினர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஜெய்வரதன் சிங், 'பாஜக-வாக இருந்தாலும் யாராக இருந்தாலும், ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கியது தவறு. இன்று இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதற்கு ஜவஹர்லால் நேருதான் காரணம்' எனக் கூறினார். மேலும் இதுகுறித்து சபாநாயகரிடம் பேசவிருப்பதாகக் கூறீனார். 

ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அம்பேத்கரின் புகைப்படம் நிறுவப்பட்டுள்ள நிலையில், 'விரைவில் பாஜக அம்பேத்கர் புகைப்படத்தையும் நீக்கிவிட்டு கோட்சேவின் புகைப்படத்தை வைப்பார்கள்' எனக் காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் கூறியுள்ளார்.    

இது தொடர்பாக சட்டபேரவையில் சிறப்புக் குழு உள்ளது, அந்த குழு முடிவினை எடுக்கும் என சபாநாயகர் கோபால் பார்கவா தெரிவித்துள்ளார்.  

மேலும், மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வர் ராஜேந்திர ஷுக்லா, 'அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்ததில் தவறில்லை. ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை எங்கு நிறுவலாம் எனக் குழு முடிவு செய்யட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.