தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கை கூப்பி வணங்காத தலித் முதியவருக்கு 3 மணிநேரம் அடி உதை!

மத்தியப் பிரதேசத்தில் கை கூப்பி வணங்கிடாத முதியவரை கட்டி வைத்து 3 மணி நேரம் துன்புறுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கோப்புப்படம்.

Published On :

மத்திய பிரதேசத்தில் கை கூம்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து 3 மணி நேரம் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடைப்பிரா கிராமத்தைச் சேர்ந்த நேதுரம் அஹிர்வார் எனும் முதியவர் இந்த தீண்டாமைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.

நியாய விலைக் கடைக்கு சென்று திரும்பிய முதியவரை வழி மறைத்த இரண்டு உயர் சாதியினர் அவரைக் கட்டி வைத்து 3 மணிநேரம் அடித்ததில் அவர் நடக்கும் திறனை தற்காலிகமாக இழந்துள்ளாதக் கூறப்படுகிறது. அவரை சாதி பெயரைச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாதிக்கப்பட்ட  முதியவர் தெரிவித்துள்ளார். 

முதியவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் துணை ஆய்வாளர் மார்கண்டே மிஷ்ரா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.