ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி படைகள் தாக்குதல்...

houthi attacks saudi

ஹௌதிகள் தாக்குதல்... - கோப்புப் படம்

Published On :

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவுக்கும் யேமனின் ஹௌதி படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜிசான் நகரத்தில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இன்று (ஆக. 13) ஹௌதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சௌதி அரேபியாவின் மிகப் பெரிய உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அரம்கோவின் மீது 2 ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சௌதி அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இத்துடன், யேமனின் வான்வழிப் பாதையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கும், சதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களில் இறையாண்மையை மீறியதற்காகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் பயணிப்பதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர்.

ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சௌதி மீது ஹௌதிகள் தடை விதித்துள்ளதால் இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Yemen's Houthi rebels have launched a drone attack on the Saudi Arabian city of Jizan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.