செங்கடல் பகுதியில் அமைந்துள்ள யேமனின் மோக்கா துறைமுக நகரத்தின் மீது அந்நாட்டின் ஹௌதி கிளர்ச்சிப்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் பகுதியில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்குச் சொந்தமான மோக்கா துறைமுக நகரத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) முதல் அந்நாட்டின் ஹௌதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல்களில் அரசுப்படைகளச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோக்கா நகரத்தின் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, ஹௌதிகள் புதன்கிழமை மதியம் அறிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில், துறைமுகத்தின் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக, யேமன் அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டதாக என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சௌதி அரேபியாவின் கப்பல்கள் மற்றும் முக்கிய தளவாடங்கள் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
உலகின் 12 சதவிகித வணிகம் நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையின் வழியாக சௌதி கப்பல்கள் செல்வதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர்.
இதனால், தங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சௌதி படைகள் மோக்கா நகரத்தில் குவிக்கப்பட்டு வருவதாகக் கூறி ஹௌதி படை அந்நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Yemen's Houthi rebels launched a missile attack on the port city of Mocha, located in the Red Sea region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம் அதிகரிப்பு

செங்கடலில் சௌதியின் கப்பல் மீது ஹௌதிகள் தாக்குதல்! உருவாகிறதா புதிய போர்?

சௌதிக்கும் ஹௌதிக்கும் இடையே தொடரும் மோதல்! 8 கப்பல்கள் வழிமறிப்பு!

செங்கடல் வழியாகச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்க ஹவுதிகள் திட்டம்! புதிய சர்வதேச நெருக்கடி?
விடியோக்கள்

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு | Aadi Ammavasai | Thithi tarpanam | Srirangam amma mandapam




