மம்தாவும், கேஜரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கேஜரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
மம்தாவும், கேஜரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கேஜரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் தில்லியில் இன்று (டிச.19) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கேவை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ கூறினார்.

ஆனால் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்தார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கார்கே, “முதலில் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றியடைய வேண்டும், பின்பு எங்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகப்பூர்வமாக பிரதமரை தேர்வு செய்வார்கள்.” என்று கூறினார்.

பிரதமர் வேட்பாளர் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவுடன் எந்த கட்சியும் இல்லை. அவர்களுக்கு கூட்டணியும் இல்லை. ஆனால் நாங்கள் அப்படி அல்ல. 

இந்தியா கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன. எனவே இங்கு ஏராளமான கருத்துகள் இருக்கும், ஏராளமான பார்வைகள் இருக்கும். இருப்பினும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாஜகவை எதிர்க்கிறோம். பிரதமர் குறித்து அனைவரும் பேசி முடிவெடுப்போம்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com