புதிய அரசு பதவியேற்று ஓராண்டுக்குப் பிறகு ஹிமாச்சல் பிரதேசத்தின் சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. குல்தீப் சிங் பதானியா சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 19) ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் துணைத் தலைவராக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினரான வினய் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சட்டப்பேரவைத் துணைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்ட பிறகு வினய் குமாருக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



