மீண்டும் அச்சுறுத்தும் கரோனா: மே 21-க்குப் பிறகு அதிகரித்த தினசரி பாதிப்பு
நாட்டில் கடந்த 21ஆம் தேதிக்குப் பிறகு, தினசரி கரோனா பாதிப்பு 614 ஆக உயர்ந்துள்ளது என்பது மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.


புது தில்லி: நாட்டில் கடந்த 21ஆம் தேதிக்குப் பிறகு, தினசரி கரோனா பாதிப்பு 614 ஆக உயர்ந்துள்ளது என்பது மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,311 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 5,33,321 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. கேரளத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 292 ஆக அதிகரிப்பு. 3 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கேரளத்தில் கரோனா பாதிப்பு 2041 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!
இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று காணொலி வாயிலாக கலந்தாலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார். மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் தடுப்பு பயிற்சிகள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவது குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலம் என்பதால், விழிப்புணர்வை மக்களிடையே அதிகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருப்பதோடு, சுகாதாரம் என்பது அரசியல் வட்டத்துக்குள் வராது. எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...