எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறை சோதனை... சிக்கிய பணம் எவ்வளவு?

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோப்பு
கோப்பு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 70 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரிஏய்ப்புக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்க திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ பைரான் பிஸ்வாஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை காலை தொடங்கிய சோதனை 19 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதற்கான போதிய விளக்கம் எம்.எல்.ஏ தரப்பில் அளிக்கப்படவில்லை எனவும் ஐ.டி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எம்.எல்.ஏ தரப்பில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மேற்கு வங்கம் சாகர்திகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிஸ்வாஸ், பின்னர் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com