மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதே காரணம்: திமுக தரப்பில் விளக்கம்

குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி பொன்முடி விடுதலையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 10:25 am

DIN

குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி பொன்முடி விடுதலையை ரத்து செய்து தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 2006 – 2011 ஆம் ஆண்டு காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் , விசாரனை நிறைவு பெற்று கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில் அவர் விடுதலை செய்யப்படுவார். அவரது துணைவியார் அவர்கள் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி  வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானம் வருவதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளது.

பொன்முடியின் துணைவியார் அவர்கள்  குறித்த நேரத்தில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி தான் கீழமை நீதிமன்றம் கொடுத்த விடுதலையை ரத்து செய்துள்ளனர்.

1996 – 2001 காலகட்டத்திலும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் ஆதாரங்களை பார்த்தால் , பொன்முடிக்கு குடும்ப சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும், தொழிலை ஆரம்பிக்கும் போது பொன்முடியின் சகோதரர்கள் பெரும் அளவிற்கு முதலீடுகளை கொடுத்ததும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், சாட்சியங்கள் அடிப்படையில் மிக லாபகரமாக பொன்முடியின் மனைவி தொழிலை நடத்தி வந்தார் என்பதும்,  வருடத்திற்கு 5 கோடி அளவிற்கான வியாபராம் செய்து வந்துள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி விடுதலையை ரத்து செய்து தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றுத்தரப்படும்.

நீதிபதி என்பவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் , அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இந்த வழக்கு நடக்கும் போது அது தெரியவில்லை , நேற்றைக்கு தான் பொன்முடி அவர்களுக்கு தெரிய வந்தது.  அதை நீதிபதி அவர்களிடம் எடுத்து சொன்னோம். அப்போது நீதிபதி சொல்லும் போது, முன்னரே இதை தெரியப்படுத்தியிருந்தால்கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என கூறினார். 

இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனையை நாங்கள் நிச்சயம் உச்சநீதிமன்றத்திலும் எடுத்து வைப்போம்.

இந்த வழக்கின் புலன் விசாரடிண அதிகாரியை குறுக்கு விசாரனை செய்யும் போது, பொன்முடி அவர்களின் வருமானத்திற்கும், அவரது மனைவியின் வருமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த சொத்துகள் திரு பொன்முடி அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கீழமை  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.  அதன் அடிப்படையில் தான் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கில் விடுதலை செய்தது. தற்போது கூட , குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை அது சந்தேகத்தை எழுப்புகிறது என்று தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆவணங்களின் அடிப்படையில் பொன்முடி அவர்களின் மனைவிக்கு வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானத்தை ஈட்டும் தொழில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறியிருக்கும் நிலையில் , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம்.

கொடுக்கப்பட்டிருக்கும் 30 நாட்களில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவோம். மேலும் , இந்த தண்டனையை நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம் . அப்படி உச்சநீதிமன்றம் சார்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு என்பது இல்லாமல் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.