கோப்புப்படம்
கோப்புப்படம்

மோடி குறித்து ராகுலின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல: தில்லி நீதிமன்றம்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on


புது தில்லி: நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும்  தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 22 -ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என்று விமர்சித்திருந்தார். இது குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது ஏற்கத்தக்கதல்ல என்றும், தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் நடந்த பேரவைத் தோ்தலின்போது, கடந்த நவம்பர் மாதம் பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி பங்கேற்றாா். 22ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், ‘பிரதமா் நரேந்திர மோடி பெயா் கொண்ட மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை நேரில் காணச் சென்ற பிரதமா் மோடி ஒரு அதிருஷ்டமில்லாதவா். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைத்திருப்பும் வேளையில் ஈடுபடுகிறார். தொழிலதிபர் கௌதம் அதானி போன்றோர் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள் என விமரிசித்திருந்தார்.

இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com